இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எளிதாகக் கிடைத்துவிடும் மாற்றமும் முன்னேற்றமும்! நம்முடைய வாழ்க்கை பற்றி நாம் கொண்டிருக்கிற கணிப்பை மாற்றிக் கொண்டாலே

படம்
1. நான் 27 அகவை இளைஞன், எனக்கு இரவில் தூக்கம் வராமல் மனம் ஏதாவது ஒன்றை உருவாக்கி அதை பற்றி தேவையில்லாத நினைவுகளால் என்னை தூங்க விடாமல் செய்கிறது. இந்த எண்ணத்தைச் சரி செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? 2. இறப்பை நினைத்து எப்போதும் அச்சமாக இருக்கிறது. பேருந்தில் காரில் இப்படி பயணம் செய்யும் போதும் ஏதாவது ஆகுமோ என்று தோன்றுகிறது. வீட்டுக்குள்ளே அஞ்சி வாழ்கிறேன். இந்த அச்சத்தை எப்படி போக்குவது? 3. நான் ஒரு உள்முக சிந்தனையாளர். ஒரு நிமிடத்திற்கு மேல் பேசினாலோ அல்லது வாசித்தாலோ சோர்வு ஏற்பட்டு தூக்க நிலைக்கு செல்கிறேன். இயல்அறிவு (சயின்ஸ்) பாடான காரணம் மற்றும் தீர்வை கூற முடியுமா? 4. நான் ஒரு ஆணாக, ஒரு பெண்ணின் திமிருக்கு முன்னாடி என்னால் ஒன்றும் பேச (செய்ய) முடியவில்லை, அவளைப் பார்க்கும் பொழுது ஒரு வித அச்சம் என்னை பற்றி கொள்கிறது. அவளிடம் நான் ஒரு அடிமை போல் இருக்கிறேன், இதை எப்படி மாற்ற? 5. கொரோனா வருவதை எந்த சோதிடரும் கணிக்கவில்லை வந்த பின்பு எந்தத் தெய்வமும் மனிதனை இறப்பில் இருந்து காக்கவில்லை அப்போது எங்கே அந்தத் தெய்வங்கள்? எதற்காக சோதிடம்? நான் கேள்வித்தளத்தில் ஐந்து மணித்துளிகளுக்குள்

அழுது அடம்பிடிக்கிற குழந்தைகள் கற்றுத்தரும் மந்திரம்

படம்
நம்முடைய குழந்தைகள் அழுது அடம்பிடிப்பது, நம்மூலமாக தங்கள் கேட்புகளைக் கடவுளிடம் நிறைவேற்றிக் கொள்வதற்கான மந்திரச் செயல்பாடே என்கிறது, தமிழ்முன்னோரால் நிறுவப்பட்ட இயல்கணக்கு, என்பதை விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை.  தமிழ் முன்னோர் இயற்கையிடம் இருந்தும் தம் குழந்தைகளிடம் இருந்தும் நிறையக் கற்றனர். அவைகளை இயற்றமிழ் என்ற தலைப்பில் நிறுவியுள்ளனர். இயற்றமிழ் இரண்டு உட்தலைப்புகளைக் கொண்டது. ஒன்று இயல்அறிவு மற்றொன்று இயல்கணக்கு. இயல் உடையது இயற்கை. இயல் என்பது இயம் என்கிற கோட்பாட்டையும் இயக்கம் என்கிற நடைமுறையையும் உள்ளடக்கியது. இயல்அறிவு என்பது இயற்கையின் கோட்பாட்டையும் நடைமுறையையும் அறிதல் ஆகும். இதை ஆங்கிலம் சயின்ஸ் என்கிறது. ஆங்கிலம் சொல்லுகிற சயின்ஸ் நம்மிடம் இயல்அறிவாக பன்னெடுங்காலமாக புழக்கத்தில் இருந்ததை கரிகாலன் கட்டுவித்த கல்லணை நின்று தெரிவித்துக் கொண்டிருக்கிறது. ஆக சயின்ஸ் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்சொல் இயல்அறிவு ஆகும். ஐரோப்பியச் சார்பில் இயங்கும் நம் கல்வியாளர்கள் இன்று ஐரோப்பிய சயின்சை மலைத்து அதை அறிவியல் என்று தமிழ்ப்படுத்துகின்றனர். இது பிழையான முன்னெடுப்பு ஆகும்

கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே

படம்
கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே. கடவுள் என்கிற சொல்லில் தமிழ்முன்னோர் பொதித்துள்ள பொருளில் உலகில் எந்த மொழியும் சொல் கொண்டிருக்கவில்லை. கடவுளுக்கு நாம் கொடுக்கிற இயக்கத்திற்கு, எதிர்இயக்கமாக நம்மை முயக்குவது மட்டுமே கடவுள். மாறாக, கடவுள் சொந்த இயக்கமோ எல்லையோ கொண்டது அல்ல என்று, தமிழ்முன்னோர் கடவுளில் பொதித்துள்ள பொருளை விளக்குவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. இயற்கையில் எல்லாவற்றுக்கும் வெளியில் அமைந்தது என்கிற பொருளில் 'வெளி' என்றொரு சொல்லை நிறுவினர் தமிழ்முன்னோர். நான் தனியானவன் அல்லன்.  நான் ஒரு கூட்டியக்கம். நான் பல உறுப்புகளால் ஆனவன். என் எந்த உறுப்பும் தனியானது அல்ல. ஒவ்வொரு உறுப்பும் இழையங்;களால் (திசு) ஆனது. இழையம் எதுவும் தனியானது அல்ல. ஒவ்வொரு இழையமும் பல கலங்களால் (செல்) ஆனது. கலம் எதுவும் தனியானது அல்ல. ஒவ்வொரு கலமும் பல நுட்பப் பொருட்களைக் கொண்டுள்ளன. இவைகள் அனைத்திற்கும், வெளி- வெளியாக மட்டும் இல்லாமல், உள்ளாகவும் வெளி- இருக்கும். தமிழ்முன்னோர் நிறுவும் மிக மிக நுட்பமானதும் முதலாவதும் ஆனவை தனிஒன்றுகள் அந்தத் தனி ஒன்றுகளில் மட்டுமே வெளி- வெளியாக மட்டுமே அமையும்.