பெயரே முதல் அடையாளம்! புரிந்து கொள்ள வேண்டும் தமிழர்கள்


தமிழ் (தாய்மொழி) உங்கள் முதலாவது உடைமை என்பதால், தமிழ்மொழியில் பெயர்சூட்டப்பட்டவர்கள் 'உடைமை இயல்புக்கு' சொந்தக்காரர்களாகக் கடவுளால் பட்டியல் இடப்படுகின்றீர்கள். என்பதான, என்பட்டறிவில் கிடைத்த இந்தச் செய்தியை, தமிழ்மக்களுக்குப் பகிர்ந்து, விழிப்புணர்வு ஊட்டும் முயற்சிகானது இந்தக் கட்டுரை.

முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். அதைப் புரிந்து கொண்டு இயங்கியிருந்த தமிழினம், உலகுக்கு ஆசிரியராய் அமைந்திருந்த காலம் உண்டு. 

உலகம் இன்றும் அடிப்படையாய் கொண்டிருக்கிற அறிவின் பெரும்பகுதி அந்தப் பெருமைக்குரிய காலத்தில், உலகின் முதல் கடலோடியாக விளங்கிய தமிழ்மக்கள், கடற்கரை உள்ள நாடுகளுக்கெல்லாம் கப்பல் செலுத்தி முத்து, மயில்தோகை, சுவைகூட்டும் உணவுப் பொருட்கள், மெல்லிய துணிவகைகள் என்பதான வணிகப்பொருட்களோடு வழங்கியிருந்த வானியல், எண்ணியல், இயல் கணிப்பு கண்டுபிடிப்புகள் தாம். அக்காலத்து தமிழ்மக்கள் கண்டறிந்த ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதியம், வியாழம், வெள்ளி, கருக்கரிவாள் என்கிற கோள்களும், அந்த கோள் பெயர்களைப் கிழமையாக்கிய பாட்டையே மொழிபெயர்த்து இன்றுவரை பின்தொடருகிறது உலகம். அக்காலத்து தமிழ்மக்கள் பெயர்சூட்டிய உலகையே உல்டு என்று ஐரோப்பியமும், லோக் என்று பற்பல மொழிகளும் இடுகுறியாக ஒலிபெயர்ப்பு செய்து கொண்டனவேயன்றி உல் என்றால் வட்டமானது என்கிற பொருளைப் உலகினர் யாரும் புரிந்து கொள்ள முயலாமல் கலிலியோ வரும்வரை உலகம் தட்டையானது என்றே கருதியிருந்தனர்.

அந்த காலத்து தமிழ்மக்கள் உலகில் சிறந்த மாந்தராய் நடைபோட்டதற்கு அவர்களின் அறிவுத்தேடலே காரணமாய்; அமைந்தது.

இன்றைய தமிழர், பல்வேறு அயல்சார்ந்து, அந்தந்த அயலவரே அறிவாளர் என்று கொண்டாடி, அவர்களுக்கு நமது அனைத்து உடமைகளையும் ஒப்டைத்து, வாடகை கொடுத்து இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு மனிதனின் முதல் அடையாளம் அவனது பெயர்!

நீங்கள் யாரென்று உங்களுக்கு அடையாளம் காட்ட உங்கள் பெற்றோர் உங்களுக்கு அறிவித்த முதலாவது சொல் உங்கள் பெயர். உங்கள் பெயரை நீங்களும் உங்கள் உறவு, நட்பு, தொடர்புகளும் ஒவ்வொரு முறை ஒலிக்கும் போதும் அந்தப் பெயர் கொண்டிருக்கிற இயல்பே நீங்கள் என்று அந்த அனைவரோடும் கடவுளும் புரிந்து கொள்கிறது.

உங்கள் பெயரின் இயல்புக்கே, கடவுள் உங்களுக்கு ஒருங்கிணைத்துத் தரவேண்டியவைகளின் பட்டியலை முதலாவது உருவாக்குகிறது.

தாய்மொழி (எண்ணமொழி) உங்கள் முதலாவது உடைமை என்பதால், தாய்மொழியில் பெயர்சூட்டப்பட்டவர்கள் 'உடைமை இயல்புக்கு' சொந்தக்காரர்களாகக் கடவுளால் பட்டியல் இடப்படுகின்றீர்கள்.

மதம் சார்ந்தோ, மற்ற மற்ற முனைப்புகள் சார்ந்தோ முழுமையான அறியாமையில், அயல் மொழிப்பெயரைச் சூட்டிக் கொண்டவர்கள் அந்த குழுவினரின் வரிசையில் பின்னாக நிறுத்தப்பட்டு, உரிமைக்கு வாழ்க்கை முழுவதும் போராடும் 'உரிமை இயல்புக்கு' உரியவர்களாகக் கடவுளால் பட்டியல் இடப்படுகின்றீர்கள்.

இருபதாண்டு கால என் நெடிய ஆய்வில் நான் கண்டறிந்த உண்மை: தமிழில் பெயர் கொண்டவர்களுக்கு எளிமையாக சொந்த வீடு அமைகிறது என்பதாகும். மற்றவர்களுக்கு அமைந்த சொந்த வீடு அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தையும் சேர்த்தே அடையாளப்படுத்துகிறது என்பதும் ஆகும். உங்கள் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்ட இரண்டாவது கவனிக்க வேண்டியது: நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டும் பெயர் கொண்டிருக்கிற இயல்பு அறிவது ஆகும். பொதுவாக உலகின் அனைத்துப் பெயர்களும் 1.உழைப்பு 2.மேலாண்மை (நிருவாகம்) 3.முனைப்பு (குழந்தைத்தனம்) 4.பயணம் 5.கலை 6.தெழில்நுட்பம் 7.கமுக்கம் (செல்வாக்கு) 8.புகழ் 9.போரியல் (தனிமுடிவு) என்கிற ஒன்பது எண்களையும் அந்த எண்களுக்குரிய ஒன்பது இயல்புகளையும் கொண்டுள்ளன. கணவனும் மனைவியும் கலந்து பேசி தங்கள் பிள்ளைகளுக்கு எந்த இயல்பில் பெயர் சூட்டாலாம் என்று முடிவு செய்வது அந்த பிள்ளைகளின் சிறந்த அடையாளமாகவும், அந்த பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நல்ல பாதையாகவும் அமையும். இந்தக் கட்டுரையின் நோக்கத்தைச் செறிவாகப் புரிந்துகொள்வதற்கு, கடவுள் கட்டுரையையும், முதலெனப்படுவது இடமும் காலமும் என்கிற செய்தி குறித்த கட்டுரையையும் மீண்டும் மீண்டும் படித்துப் புரிந்து கொள்வது நன்று.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே

உலகத் தோற்றம் குறித்த தமிழர் கருதுகோள் உலகினர் கருதுகோளுக்கு முற்றிலும் வேறானது.