001. நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா!
தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில் காணப்படுகிற கிறல்கள் அல்ல. உங்களுக்கான தலையெழுத்து என்பது: நிலம், நீர், தீ, காற்று விசும்பு என்கிற ஐந்திர ஆற்றல்களில் (பஞ்சபூதம்) ஒன்றான விசும்பு என்கிற வண்தட்டுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்று வடிவமைத்துக் தருகிற மென்பொருள் ஆகும். உங்கள் தலையெழுத்தை உங்கள் விருப்பதிற்கு நீங்கள் எழுதிக் கொள்கிற கலை மந்திரம்.
இரண்டு அகவைக்குள் ஒவ்வொரு குழந்தையும், தந்தையை, தாயை, மற்றவர்களைப் போல தான் நடக்க வேண்டும் என்று விசும்பில் பதிவிட்டு, இந்த மந்திர ஆற்றல் மூலமாகத்தான் எழுந்து நடக்கக் கற்றுவிடுகிறது. இவ்வாறாக, குழந்தை எழுந்து நடக்கும் வரையிலான முயற்சிகளின் ஒவ்வொரு நிலையை வைத்தே
உடற்பயிற்சிக் கலையான ஓகக் கலையைக் கட்டமைத்தனர் தமிழ் முன்னோர்.
ஐந்து அகவை வரையிலுமான குழந்தைகள், இந்த மந்திர ஆற்றல் மூலமாகத்தான், தன் ஐந்து அகவைக்குள், தன் தாய்மொழியை, தன் எண்ணமொழியாக, முழுமையாகக் கற்றுக் கொள்கிறது. தன் தாய்மொழியை, தான் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதான மென்பொருளை வடிவமைத்து, அதைத் தனக்கான தலையெழுத்தாக விசும்பில் எழுதிவிட்டு சாதிக்கிறது.
ஆனால், ஐந்து அகவைக்கு முன்பாகவே, குழந்தைகளின் விருப்பம் இல்லாமலேயே, பெற்றோர்கள் தங்கள் விருப்பங்களை, அந்தக் குழந்தையின் மீதாக திணிக்கும் முகமாக, மழலையர்ப் பள்ளிகளில் அந்தக் குழந்தைகளைக் கையளிக்கின்றார்கள். நீங்கள், உங்கள் தலையெழுத்தை யாரோ எழுதுவதாக நம்புவதைப் போல, அந்தக்குழந்தையும் தன்னுடைய தலையெழுத்தை பெற்றோர், ஆசிரியர், சுற்றம், நட்பு, உங்களால் அடையாளம் காட்டப்படுகிற தெய்வம் என்று யார்யாரோ, தம்முடைய தலையெழுத்தை எழுதுகின்றனர் என்ற முடிவுக்கு வந்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து, எதிர்பார்ப்புகளை நிறைத்துக் கொண்டு, வாழ்க்கையைத் தொலைத்து விட்டு பிழைப்பு நடத்தத் தொடங்கி விடுகிறது.
நாம்- விசும்பு என்கிற கடவுளிடம், எது கேட்டாலும் கிடைக்கும். கடவுள் நன்மைதீமை என்று பாராமல் கொடுக்கும், என்பதாக தமிழ்முன்னோர் நிறுவிய, ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்கிற தமிழர் மந்திரச் செய்தியை மறந்து விட்டு, தனக்கான நன்மையைப் பிறர் தரவில்லையே என்றும், மற்றவர்கள் தீமையையே தருகிறார்கள் என்றும் புலம்பி, அந்தப் புலம்பலையே தன்னுடைய தலையெழுத்தாக வடிவமைக்கத் தொடங்கி, அதையே திரும்பப் பெறுகின்றன. இதை மாற்றியமைத்து, நமது குழந்தைகளின் தலையெழுத்தை அவர்களே
தொடர்ந்து எழுதிக் கொள்ளும் முகமாகவே அவர்களை முன்னெடுக்கவும், நாம் நமது புலம்பல்களை விட்டொழித்து நமக்கு என்ன தேவை என்பதை நேரடியாக விசும்பில் பதிவிட்டு நமது வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்ளவும், இந்த மந்திரம் உங்களுக்கு உதவிட வேண்டும் என்பதற்கானது தமிழ்முன்னோர் முன்னெடுத்த ஐந்தாவது முன்னேற்றக் கலையான மந்திரம்.
நம்முடைய தலையெழுத்தை நாம்தாம் எழுதிக் கொள்கிறோம். நம்முடைய தலையெழுத்தை, நாம் ஒப்புக்கொடுக்காமல் யாரும் மாற்றி எழுத முடியாது என்று தெரிவிப்பதற்கானது அடுத்துவரும் நீங்கள்தாம் உங்கள் தலைஎழுத்தை எழுதிக் கொள்கின்றீர்கள்! யாரும் உங்கள் தலைஎழுத்தில் மாற்றம் செய்ய இயலாது என்கிற கட்டுரை.
இந்தக் கட்டுரை நான் எழுதியுள்ள மந்திரம் நூலின் முதலாவது கட்டுரையாகும்.
மந்திரம் நூல் குறித்த ஆசிரியர் உரையைப்படித்துப் பாருங்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு, மந்திரம் நூல் தேவைக்கு:
புத்தகவிலை ரூ380 அஞ்சல் செலவு ரூ30 மொத்தம் ரூ. 410ஐ 9500612859 செல்பேசி எண்ணிற்கு கூகுள்பே அல்லது போன்பே அல்லது வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக