உலகத் தோற்றம் குறித்த தமிழர் கருதுகோள் உலகினர் கருதுகோளுக்கு முற்றிலும் வேறானது.

 


நம் பழந்தமிழர், விசும்பு என்று அழைத்த, பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில்- பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து, நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிற நமது பெயரை அமைத்துக் கொள்வது குறித்த, கலையே கணியக்கலை. கணியக்கலை குறித்து தொடர்ந்து பேசிடும் வகைக்கானதே இந்தத் கட்டுரையும்.  

மதம் சார்ந்தவர்கள்:- உலகம் படைக்கப் பட்டதாக கூறி வருகின்றார்கள். 

இயல்அறிவு (சயின்ஸ்) சார்ந்தவர்கள்:- பெருவெடி- சிதறிய கோள்கள், விண்மீன்கள்- ஞாயிறு; ஞாயிறிலிருந்து பிரிந்த உலகு- ஆர்கானிக் பரிணாம உயிர்த் தோற்றத்தின் வழி தாவரங்கள் குரங்கு வரை விலங்குகள் குரங்கிலிருந்து மனிதர்கள் தோன்றியதாகவும் கூறி வருகின்றார்கள். 

மார்க்சிய வாதிகள்:-படைப்பாளி என்பது ஒரு கருத்து என்றும், உலகம் படைக்கப் பட்டதாக கூறுவது கருத்து முதல்வாதம் என்றும், மதங்கள் கூறும் படைப்பாளி இல்லவேயில்லை யென்றும், பொருளே முதல் என்றும் பொருளிலிருந்தே கருத்து என்றும், மனிதனுடைய கையே மனிதனுக்கு கருத்து தோன்றுவதற்கான அடிப்படை யென்றும் கூறி வருகின்றார்கள். 

தமிழ்முன்னோர்:- ஐந்திரத்தில் உள்ளதே மனிதனில், மனிதனில் உள்ளதே ஐந்திரத்தில் என்றார்கள். தனிமங்களிலேயே எண்ணம் கருத்து என்பவைகளுக்கான அடிப்படை- 'இயக்கமாக' இருக்கிறது என்பதே தமிழ்முன்னோர் கண்டுபிடிப்பு. எண்ணம் மனம் கருத்து உயிர் என்பனவெல்லாம் திடிரென்று எங்கிருந்தோ தோன்றி படிரென்று எங்கோ மறைந்து போகும் என்கிற கற்பனாவாதம் எல்லாம் நம் பழந்தமிழர்க்கு உடன்பாடில்லை. 

ஒன்று என்கிற முதல் எண்ணை -தனிஅன்று- ஒன்றியது என்கிற பொருளில் ஒன்று என்றார்கள். முதல் எனப்படுவது இடமும் காலமும் என்றார்கள். இருவேறு உலகத்தியற்கை என்றார்கள்.  பொருள், கருத்து இரண்டும் மூலமுதல் என்று நிறுவினர்கள். இடம் என்பதும் திரு என்பதும்: பொருள். காலம் என்பதும் தெள்ளியராதல் என்பதும்: கருத்து. ஆக கருத்தும் பொருளும் சேர்ந்தே இருப்பது என்பதே தமிழர்தம் கருதுகோள்! 

நாம் படைக்கப் பட்டதான கருதுகோளில் தமிழர்க்கு உடன்பாடில்லை. நாம் தான்தோன்றியாக தோன்றுவதற்கு நிலம், நீர், காற்று, தீ, விசும்பு என ஐந்து ஆற்றல்களை முன்வைத்தார்கள். நிலம், நீர், தீ, காற்று எனும் நான்கும் தான்தோன்றி இயக்கம் உடைய ஆற்றல்கள். அவை வடிவம் எல்லை இயக்கம் உடைய பொருள்கள். 

விசும்பு என்பது: ஒவ்வொரு பொருளின் உள்ளேயும் வெளியேயும் (கடந்தும் உள்ளும்) தான்தோன்றி இயக்கம் இல்லாத அண்டவெளியாகவும், அந்த அண்டவெளியைத் தளமாகக் கொண்டு இயங்கும், தான்தோன்றி இயக்கமுடைய பொருள்களின் இயக்கத்தால் அண்டவெளியானது, இயக்கம் பெற்ற 'அண்ட விண்வெளியாகி' இயக்கம் தந்த பொருளை இயக்க அணியமான விசும்பு ஆற்றலே. ஆக விசும்பு என்பது: சொந்த இயக்கம் இல்லாத, எல்லை இல்லாத, ப(ர்ர்ர்ர்ர்ர்ர்அ)ரந்து வி(ர்ர்ர்ர்ர்ர்இ)ரிந்த வெளியாக இருந்து, 

நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களால் ஆன பொருள் மற்றும் உயிரிகள் இயக்கத்தால் இயக்கம் பெற்று விண்(இறுக்கநிலை)வெளியாகி, இயக்கம் தந்த பொருளால் இயக்கம் பெற்று, இயக்கம் தந்த ஒவ்வொரு பொருளுக்கும் அந்தப் பொருளால் பெற்ற இயக்கத்தால் அந்தந்தப் பொருளை முயக்க அணியமாகி பொருள்களை முயக்கும் பேராற்றலே விசும்பு ஆகும். 

அடக்க முடியாமல் அழும் குழந்தையின் அழுகையை விசும்பி விசும்பி அழுகிறது என்று சொல்லுவோம். விசும்புதல் என்பது அழுகை அல்ல. அடக்கமுடியாத வெளிப்பாடுதாம் விசும்புதல், விசும்பு என்பது அடக்கமுடியாத அடங்கிப் போகாத பேராற்றல். 

விசும்பு என்பதை வெறுமனே ஆகாயம் என்ற வடமொழி பெயர்ப்பைச் சுமந்து கொண்டு, தமிழர்தம் ஒட்டுமொத்த உலகத்தோற்றக் கோட்பாட்டையே கிடப்பில் போட்டு விட்டோம். 

விசும்பு என்ற தலைப்பிலே கூறவேண்டிய செய்திகள் ஏராளமாக இருக்கின்றன. அவைகளை காலம் காலமாக சொல்லிக்கொண்டே இருக்கலாம். 

தமிழ்முன்னோர் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு ஆகிய இந்த ஐந்து ஆற்றல்களை ஐந்திரங்கள் என்றார்கள். திறன் என்றால் ஆற்றல் (திற-வெளியேறு). திரம் (திரள்) என்றால் குவிக்கப் பட்ட ஆற்றல். 

தமிழர் சுட்டும் மூலமுதல் என்பது- எல்லை இல்லாத வெளி மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான்தோன்றி  இயக்கம் உடைய ஒன்றுகள். 

ஓன்றுகள் சிலபல எண்ணிக்கை மாற்றத்தில் நிலம், நீர், தீ, காற்று என நாற்திர ஆற்றல்கள்.  

அவைகளை இயக்க அவைகள் தந்த இயக்கத்தால் இயக்கம் பெற்ற விசும்பு ஐந்தாவது திரம். 

நாற்திர ஆற்றல்கள் கூட குறைய இணைந்து கோள்கள், கோள்களில் மண் மரம் மட்டை உலோகம் நீங்கள் நான் மற்றும் விசும்பு (அனைத்தையும் படைத்த படைப்பாளியாக அல்ல) நம்மை இயக்கும் கடவுளாக உருவாகின்றன.

தமிழ்முன்னோர் நிறுவிய மூல ஆற்றல்கள் இறை, கடவுள். வழிபாட்டு ஆற்றல் தெய்வம். 

இறை என்பன நிலம் நீர் தீ காற்று நான்கு திரங்கள். கடவுள் என்பது விசும்பு திரம். 

தெய்வம் என்பவை வீட்டுத்தெய்வம், குலதெய்வம், நிலதெய்வம் என பெற்றோர்கள், முன்னோர்கள், அரசர்கள், போர்வீரர்கள், ஞாயிறு, கால்நடைகள், கருவிகள், தொழிலாளர்கள் என்றவாறு நமக்கு ஒத்துழைத்த ஆற்றல் தொய்ந்தவர்கள் (தொய்ந்தவர்கள் தெய்வங்கள்). 

தமிழர் வழிபாடு நன்றி பாராட்டுதலே (பயம் பக்தி சார்ந்தது அன்று). சிறியதிலிருந்து பெரியது, இல்லாததிலிருந்து இருப்பது, குரங்கிலிருந்து மனிதன் என்பதெல்லாம் தமிழ்முன்னோருக்கு உடன்பாடானதன்று. 

பேரண்ட பெருவெடியிலிருந்து சிதறிய கோள்கள் தொடர்ந்து மழை குளிர்வு போன்றதெல்லாம் தமிழர் அடிப்படைகளுக்குப் பொருந்தாது. 

பேரண்ட பெருவெடி சிதறலில், எல்லை இல்லாத வெளி மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான்தோன்றி இயக்கம் உடைய ஒன்றுகளே சாத்தியம். 

பேரண்ட பெருவெடி தமிழர் அடிப்படையில் இறுதியாக முடியுமே அன்றி தொடக்கமாக முடியாது. தமிழர் உலகத் தோற்றம் (தொடக்கம்) என்பது, எல்லை இல்லாத, தான்தோன்றி இயக்கம் இல்லாத வெளி மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எல்லை அல்லது வடிவம் உடைய, தான்தோன்றி இயக்கம் உடைய ஒன்றுகளே. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே

பெயரே முதல் அடையாளம்! புரிந்து கொள்ள வேண்டும் தமிழர்கள்