உலகத் தோற்றம் குறித்த தமிழர் கருதுகோள் உலகினர் கருதுகோளுக்கு முற்றிலும் வேறானது.
நம் பழந்தமிழர், விசும்பு என்று அழைத்த, பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில்- பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து, நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிற நமது பெயரை அமைத்துக் கொள்வது குறித்த, கலையே கணியக்கலை. கணியக்கலை குறித்து தொடர்ந்து பேசிடும் வகைக்கானதே இந்தத் கட்டுரையும். மதம் சார்ந்தவர்கள்:- உலகம் படைக்கப் பட்டதாக கூறி வருகின்றார்கள். இயல்அறிவு (சயின்ஸ்) சார்ந்தவர்கள்:- பெருவெடி- சிதறிய கோள்கள், விண்மீன்கள்- ஞாயிறு; ஞாயிறிலிருந்து பிரிந்த உலகு- ஆர்கானிக் பரிணாம உயிர்த் தோற்றத்தின் வழி தாவரங்கள் குரங்கு வரை விலங்குகள் குரங்கிலிருந்து மனிதர்கள் தோன்றியதாகவும் கூறி வருகின்றார்கள். மார்க்சிய வாதிகள்:-படைப்பாளி என்பது ஒரு கருத்து என்றும், உலகம் படைக்கப் பட்டதாக கூறுவது கருத்து முதல்வாதம் என்றும், மதங்கள் கூறும் படைப்பாளி இல்லவேயில்லை யென்றும், பொருளே முதல் என்றும் பொருளிலிருந்தே கருத்து என்றும், மனிதனுடைய கையே மனிதனுக்கு கருத்து தோன்றுவதற்கான அடிப்படை யென்றும் கூறி வருகின்றார்கள். தமிழ்முன்னோர்:- ஐந்திரத்தில் உள்ளதே மனிதனில், மனிதனில் உள்ளதே ஐந்திரத்தில் என்றார்கள். தனிமங்களி