001. நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா!
தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில் காணப்படுகிற கிறல்கள் அல்ல. உங்களுக்கான தலையெழுத்து என்பது: நிலம், நீர், தீ, காற்று விசும்பு என்கிற ஐந்திர ஆற்றல்களில் (பஞ்சபூதம்) ஒன்றான விசும்பு என்கிற வண்தட்டுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்று வடிவமைத்துக் தருகிற மென்பொருள் ஆகும். உங்கள் தலையெழுத்தை உங்கள் விருப்பதிற்கு நீங்கள் எழுதிக் கொள்கிற கலை மந்திரம். இரண்டு அகவைக்குள் ஒவ்வொரு குழந்தையும், தந்தையை, தாயை, மற்றவர்களைப் போல தான் நடக்க வேண்டும் என்று விசும்பில் பதிவிட்டு, இந்த மந்திர ஆற்றல் மூலமாகத்தான் எழுந்து நடக்கக் கற்றுவிடுகிறது. இவ்வாறாக, குழந்தை எழுந்து நடக்கும் வரையிலான முயற்சிகளின் ஒவ்வொரு நிலையை வைத்தே உடற்பயிற்சிக் கலையான ஓகக் கலையைக் கட்டமைத்தனர் தமிழ் முன்னோர். ஐந்து அகவை வரையிலுமான குழந்தைகள், இந்த மந்திர ஆற்றல் மூலமாகத்தான், தன் ஐந்து அகவைக்குள், தன் தாய்மொழியை, தன் எண்ணமொழியாக, முழுமையாகக் கற்றுக் கொள்கிறது. தன் தாய்மொழியை, தான் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதான மென்பொருளை வடிவமைத்து, அதைத் தனக்கான தலையெழுத்த...